வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதே ஒரே குறிக்கோள் காங்கிரஸ் செயலாளர் பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதே நமது ஒரே குறிக்கோள் என காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேசினார்.
கருங்கல்,
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வாக்குச்சாவடி பிரதிநிதிகள் கூட்டம் சாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், பிரின்ஸ், தமிழக காங்கிரஸ் செயலாளர் அருள் பெத்தையா, கேரள மாநில காங்கிரஸ் செயலாளர் வல்சலம், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான சஞ்சய்தத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பஞ்சாயத்து, வட்டாரம், வார்டு வாரியாக நானே நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். வருகிற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதே நமது ஒரே குறிக்கோளாக இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
தேர்தலில் மின்னணு எந்திர வாக்குபதிவு முறையை மாற்றி வாக்கு சீட்டு முறையை அமல் படுத்த வேண்டும். வருகின்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ரபேல் போர் விமான ஊழலில் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும். இந்து ஏழை மாணவர்களுக்கு ஜாதி, மதம், இனம், பார்க்காமல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நகர, ஒன்றிய, மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய்தத் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

Related Tags :
Next Story