மதுவிற்ற சந்துக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்: கரூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கைது
கரூர் அருகே சந்துக்கடையில் மதுவிற்பனையை கண்டித்து நடந்த முற்றுகை போராட்டத்தின் போது வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்தனர்.
கரூர்,
கரூர் அருகே ஈரோடு சாலையில் ஆத்தூர் கிராம பகுதியில் டாஸ்மாக்கடை செயல்பட்டு வந்தது. பின்னர் தேசிய நெடுஞ்சாலையையொட்டிய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த கடை அங்கிருந்து அகற்றப்பட்டது. எனினும் சிலர் அந்த கடையின் பின்புறம் சந்துக்கடை அமைத்து சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவதாக ஆத்தூர் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்பு, இந்த சந்துக்கடையால் கேள்விக்குறியானது. எனவே இதனை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் மக்கள் மனு கொடுத்தனர். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததன் பேரில், நேற்று ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த சந்துக்கடையை முற்றுகையிட்டு அங்கு மதுவிற்பனையில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், அந்த சந்துக்கடையின் முன்புறத்தில், மது குடிப்பவர்கள் அமர வசதியாக போடப்பட்டிருந்த சிலாப் கற்கள் உள்ளிட்டவை தூக்கி எறியப்பட்டன. அப்போது சந்துக்கடையில் இருந்தவர்களுக்கும், போராட்டம் நடத்தியவர்களுக்கு கைகலப்பானது. இதில் பழனிசாமி(வயது 36) என்பவரது தலையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் ரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர் அலறினார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் லேசாக தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த பழனிசாமி கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் பிரிவு பகுதியை சேர்ந்த அர்ஜூனன்(42) அளித்த புகாரின் பேரில், மது விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிற குளித்தலையை சேர்ந்த சிவா(30), பாலமுருகன், மகேந்திரன் மற்றும் கரூரை சேர்ந்த முருகானந்தம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், எதிர்தரப்பை சேர்ந்த அர்ஜூனன், ஆத்தூர் பிரிவை சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story