கயத்தாறில் நினைவு தினம் அனுசரிப்பு: வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கயத்தாறு,
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நினைவு தினம்
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கயத்தாறில் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர், அங்குள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் உள்ள அவரது வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, தாசில்தார் லிங்கராஜ், துணை தாசில்தார்கள் பாஸ்கரன், அய்யப்பன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் முருகேசன், வினோ பாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வைகோ
வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.ரமேஷ் (தூத்துக்குடி), தி.மு.ராஜேந்திரன் (நெல்லை), ஒன்றிய செயலாளர் கொம்பையா பாண்டியன், நகர செயலாளர் கட்டபொம்மு முருகன் உள்ளிட்டவர்களும்,
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் மாநில தலைவர் சங்கரவேலு, மாநில பொதுச்செயலாளர் தங்கராஜ், மாநில பொருளாளர் ரத்தின பாண்டியன், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், பாண்டியன், ராமலிங்கம், கோபால்சாமி உள்ளிட்டவர்களும்,
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பில், அதன் நிறுவனர் கே.எஸ்.குட்டி, செயலாளர் பொன்னுத்துரை, பொருளாளர் செண்பகராஜ், வக்கீல் சிவன்ராஜ் உள்ளிட்டவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொங்கலிட்டு வழிபாடு
அ.ம.மு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கணபதி பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கொம்பையா பாண்டியன், இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன், தமிழ் தெலுங்கு தேசிய கட்சி மாநில தலைவர் ராஜ்குமார் நாயுடு, இலங்கை கண்டி விக்கிரமராஜா சின்ஹா, அசோக் ராஜா உள்ளிட்டவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வ கோவிலான வீரசக்கதேவி ஆலயம், மணிமண்டப நுழைவுவாயில் அருகில் உள்ளது. அந்த கோவிலின் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். கயத்தாறு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, ஏராளமானவர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து, வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்துக்கு வந்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story