தேன்கனிக்கோட்டை அருகே : ஏரியில் மீன்பிடிக்க விரித்த வலையில் மலைப்பாம்பு சிக்கியது
தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் மீன்பிடிக்க விரித்த வலையில் மலைப்பாம்பு சிக்கியது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பஞ்சேஸ்வரம் கிராமம் அருகில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன் பிடிப்பதற்காக நேற்று மீனவர்கள் வலை விரித்துள்ளனர். பின்னர் வலையை இழுத்த போது அதிக பாரமாக இருந்தது தெரிந்தது. இதனால் அதிக மீன்கள் தான் சிக்கி விட்டதோ என நினைத்த மீனவர்கள் வலையை இழுத்து பார்த்தனர்.
அப்போது அந்த வலைக்குள் மலைப்பாம்பு இருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இது குறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு 10 அடி நீளம் உள்ளதாகும். அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் அய்யூர் காப்பு காட்டில் விட்டனர்.
உணவு தேடி வந்த அந்த மலைப்பாம்பு மீன்களை உண்ண சென்ற போது வலையில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story