திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு அடி– உதை; 4 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள வயலாநல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் அவர் தன்னுடைய வீட்டில் இருந்தபோது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தாமோதரன், அவரது நண்பர்களான ராஜேஷ், சரவணன், சின்னராசு ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி, கையாலும், இரும்பு கம்பியாலும் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து மணிகண்டன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தாமோதரன், ராஜேஷ், சரவணன், சின்னராசு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story