உர விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி சிவகங்கையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


உர விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி சிவகங்கையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2018 4:15 AM IST (Updated: 17 Oct 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

உர விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று சிவகங்கையில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் முத்துராமு, கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உர விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 2017–ம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும், நதிகள் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆறுமுகம், பொருளாளர் வீரபாண்டி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் தண்டியப்பன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story