புதுச்சத்திரத்தில் லாரி மீது பஸ் மோதல்; கண்டக்டர் சாவு 6 பேர் படுகாயம்
புதுச்சத்திரத்தில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து மதுரை, நாமக்கல் வழியாக நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சை மதுரையை சேர்ந்த டிரைவர் பாலமுருகன் (வயது 45) ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் கண்டக்டராக தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த செல்லையா (55) இருந்தார். இதில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த பஸ் இரவு 11 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. புதுச்சத்திரம் மேம்பாலத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை பஸ் டிரைவர் முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்புற பகுதியில் பஸ் மோதியது. இதனால் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
இதில் பஸ்சின் முன்புற சீட்டில் அமர்ந்து பயணம் செய்த கண்டக்டர் செல்லையா உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட கண்டக்டர் செல்லையா அங்கு சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகள் வெங்கடாசலம், செந்தில்குமார் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரைவர் பாலமுருகன் உள்பட 4 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story