ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
சிதம்பரம்,
கடலூர், நாகை, தஞ்சை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து மாணவர்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலை 9 மணிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து துறைகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், தங்களது வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமாகோவில் அருகில் ஒன்று திரண்ட னர். இதையடுத்து அங்கு போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகள், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும் அவர்கள், பாதுகாப்போம், பாதுகாப்போம் விவசாயத்தை பாதுகாப்போம், விவசாயிகளை பாதுகாப்போம், ஆபத்து... ஆபத்து... ஹைட்ரோ கார்பனால் ஆபத்து என்று முழக்கமிட்டனர். இந்த போராட்டம் மதியம் 1 மணி வரை நடந்தது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story