பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 18 Oct 2018 4:15 AM IST (Updated: 18 Oct 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை முறைப்படுத்த வேண்டும். நெல்லுக்கு உற்பத்திக்கான ஆதார விலை வழங்க வேண்டும். தமிழகத்தில் முத்தரப்பு குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும். மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களை பணியினை நிரந்தரம் செய்திட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருவாரூர் பஸ் நிலையம் அருகில் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட தலைவர் குருநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் குணசேகரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், ஐ.என்.டி.யூ.சி மாவட்ட தலைவர் காதர்மொய்தீன், எச்.எம்.எஸ். மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சங்க நிர்வாகிகள் மகாதேவன், சந்திரசேகரஆசாத், முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story