அ.தி.மு.க. தொடக்க விழாவையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அ.தி.மு.க. தொடக்க விழாவையொட்டி, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர்,
அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவினை முன்னிட்டு அரியலூர் காமராஜர் திடலில் இருந்து அரசு தலைமை கொறடாவும், அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
பின்னர் திருச்சி ரோடு, சத்திரம், தேரடி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக அரியலூர் பஸ் நிலையம் அருகே அண்ணா சிலைக்கு சென்றடைந்தனர். பின்னர் அங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் சிலைகளுக்கு அரசு தலைமை கொறடா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் தங்கபிச்சை முத்து, பொருளாளர் அன்பழகன், மாணவரணி செயலாளர் சங்கர், இலக்கிய அணி செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். மாலையில் அரியலூர் அண்ணா சிலை அருகே அ.தி.மு.க.வின் 47-வது தொடக்க விழாவினை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது.
அ.தி.மு.க. தொடக்க விழாவை முன்னிட்டு நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில், அ.தி.மு.க.வினர் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக சென்று ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை, மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செந்துறை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் முள்ளுக்குறிச்சி சுரேஷ் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய அவைத்தலைவர் செல்வம், ஒன்றிய துணைச்செயலாளர் செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருமானூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் தொகுதி செயலாளர் சேட்டு ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story