3 பேரை கொலை செய்த வழக்கு: சூலூர் கோர்ட்டில் மோகன்ராம் ஆஜர்
சூலூர் அருகே 3 பேரை கொலை செய்த வழக்கில் கைதான மோகன்ராம் சூலூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
சூலூர்,
சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மகாதேவன் என்கிற மாதவன், தியாகு என்கிற தியாகராஜன் மற்றும் அருண் ஆகியோர் ஒரு மர்மகும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய மோகன் ராம், சுரேந்திரன் ஆகியோரை சூலூர் போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இதில் சுரேந்திரன் மற்றொரு வழக்கில் கடலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். மோகன்ராம் மட்டும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 8-ந் தேதி மோகன்ராமை மும்பையில் தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட மோகன்ராமை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 17-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மோகன்ராமின் நீதிமன்ற காவல் நேற்று முடிந்ததால், போலீசார் அவரை சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், மோகன்ராமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சூலூர் போலீசார் சூலூர் கோர்ட்டில் மனு செய்து இருந்தனர்.
இதற்கிடையே, இந்த வழக்கில் மேற்கொண்டு மோகன்ராமை காவலில் எடுத்து விசாரிக்க எவ்வித அவசியமும் இல்லை அவரது வக்கீல் வாதிட்டார். இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேடியப்பன் வழக்கை வருகிற 22-ந் தேதி வரை ஒத்தி வைத்தார். இதனால் மீண்டும் மோகன்ராமை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story