பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2018 3:15 AM IST (Updated: 18 Oct 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவை பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் சங்கரன், குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், 2016, 2017–ம் ஆண்டு நிலுவை போனஸ், 2018–ம் ஆண்டிற்கான போனஸ் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு 7–ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story