அதியமான்கோட்டை அருகே: வீட்டில் தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதியமான்கோட்டை அருகே வீட்டில் தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாள். காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள ஒட்டப்பட்டி சித்தேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவர் அரூர் பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா.
இவர்களுடைய மகள் சிபிகா (வயது 14). அதியமான்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிபிகா 9-ம் வகுப்பு படித்து வந்தாள். தினமும் காலையில் இவள் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் காலை சிபிகா, தனது தங்கை கோபிகாவுடன் (9) பள்ளிக்கு சென்றாள். சிபிகா படிக்கும் அதே பள்ளியில் தான் கோபிகா 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளி சென்ற அக்காளும், தங்கையும் மாலையில் ஆட்டோவில் வீடு திரும்பினார்கள்.
பின்னர் சிபிகா வீட்டின் கழிவறைக்குள் சென்றாள். அப்போது அவளுடைய தாய் கவிதா வீட்டில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார்.
கழிவறைக்குள் சென்ற சிபிகா நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கவிதா கதவை திறந்து பார்த்தபோது சிபிகா கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சிபிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிபிகா தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story