ஐ.ஏ.எஸ். அதிகாரியின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை
ஐதராபாத்-கர்நாடக மண்டல மேம்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருப்பவர் சுபோத் யாதவ். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் டுவிட்டரில் ஒரு பதிவு போட்டார்.
பெங்களூரு,
டுவிட்டர் பதிவில், ‘அலுவலகத்தில் இன்றைய நாள் மிகமோசமான நாளாகும். நாம் செய்யும் பணிகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படாத நிலையில் சிலநேரங்களில் சிறு விஷயங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். இது தான் வாழ்க்கை. அனைத்து நாட்களும் நமக்கு இனிமையாக அமையாது.
இந்த வேளையில், நாம் உணர்ச்சிவசப்பட்டால் அது நம்மை காயப்படுத்தி விடும்‘ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை அவர் கடந்த 15-ந் தேதி பதிவிட்டு இருந்தார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியின் இந்த டுவிட்டர் பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, ஐதராபாத்-கர்நாடக மண்டல மேம்பாட்டு வாரியத்தில் முறைகேடு நடந்ததாகவும், அதை வெளிக்கொண்டுவர அவர் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தான் சில அரசியல்வாதிகள் அவரை பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும், இதை சுபோத் யாதவ் மறைமுகமாக பதிவிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story