மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கொத்தனார் பலி: 2 பேர் படுகாயம்
திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கொத்தனார் பலியானார். இந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல்,
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள எம்.வாடிப்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 35). கொத்தனார். இவர், அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (25), சதீஷ் (28) ஆகியோருடன் நேற்று திண்டுக்கல்லுக்கு கட்டுமான வேலைக்கு வந்தார். வேலை முடிந்து நேற்று மாலை 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் பஞ்சம்பட்டி பிரிவு அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த ஒரு கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், வரும் வழியிலேயே தங்கப்பாண்டி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து, திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story