முடக்கும் மூட்டுவலி
வயதானவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் மூட்டுவலி பிரச்சினைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.
வயதானவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் மூட்டுவலி பிரச்சினைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு எலும்புகளை சுற்றியிருக்கும் தசைகள் வலிமையாக இல்லாமல் இருப்பது முக்கிய காரணமாக இருக்கின்றன. அதற்காக எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவது அவசியமானது. மீன் வகைகளில் ஒமேகா 3 அமிலம் மற்றும் வைட்டமின் டி அதிகம் நிறைந்துள்ளன. முடக்குவாத நோய் பாதிப்புக்கு வைட்டமின் டி குறைபாடே காரணம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகையால் மீன் வகைகளை தவறாமல் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பூண்டுவையும் அன்றாட சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீழ்வாதம் பாதிப்பால் ஏற்படும் அழற்சியை குறைப்பதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதிலும் பூண்டுவுக்கு பங்கு இருக்கிறது. இஞ்சியையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வால்நட்டிலும் ஒமேகா 3 அமிலம் அதிகம் இருக்கிறது. அவைகளை தொடர்ந்து சாப்பிட்டுவருவதன் மூலம் எலும்பு வீக்கம், மூட்டு வலி போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். திராட்சை பழம் சாப்பிடுவதும் மூட்டுகளுக்கு வலு சேர்க்கும். அதிலும் சிவப்பு திராட்சை பழங்களை அவ்வப்போது சாப்பிட்டு வர வேண்டும். திராட்சை பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் சிவப்பு ஒயினை டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் சாப்பிட்டும் வரலாம். அவை மூட்டு வலியை குறைக்க உதவுகிறது என்பது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அடர் பச்சை நிறங்களை கொண்ட காய்கறி வகைகளையும் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகளுக்கு மூட்டு வலியை கட்டுப்படுத்தும் தன்மை இருக்கிறது. பெர்ரி வகை பழங்களும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரும். பிராக்கோலி சாப்பிடுவதும் மூட்டுவலி பாதிப்பில் இருந்து மீள வைக்கும்.
Related Tags :
Next Story