பசிபோக்கும் சாதனை
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. கல்வி கற்பதற்கு பசியும், வறுமையான சூழலும் இடையூறாக அமைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அரசு மட்டுமின்றி தனியார் தொண்டு நிறுவனங்களும் இந்த சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றன.
பெங்களூருவை சேர்ந்த அக்ஷய பாத்ரா என்ற தொண்டு நிறுவனம் 14,314 பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்கி வருகிறது. கர்நாடகம் மட்டுமின்றி 12 மாநிலங்களில் இந்த சேவையை 17 வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு குழந்தை கூட உணவின்றி கல்வியை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் மாநிலம் கடந்து உணவு சேவையை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறது இந்த அமைப்பு. ஒவ்வொரு நாளும் 17 லட்சம் மாணவர்களுக்கு இந்த அமைப்பு உணவு வழங்கி யிருக்கிறது.
‘‘சத்தான உணவு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும், பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்கும் குழந்தைகளின் படிப்பு பட்டினியால் தடைபட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் எங்கள் சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். 2001-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் 1500 பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினோம். அதற்கு கிடைத்த ஆதரவும், உதவிக்கரமும் மாநிலம் கடந்து எங்கள் சேவையை தொடர வைத்துக்கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்புகள் எங்களுக்கு பக்கபலமாக இருக்கின்றன. 2020-ம் ஆண்டுக்குள் 50 லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவளிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நான்கு மணிநேரத்தில் 1 லட்சம் பேருக்கு உணவு சமைக்கும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறோம். சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறோம். அதற்கு மனிதர்களின் உடல் உழைப்பை விட சமையல் உபகரணங்களின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது’’ என்கிறார், அக்ஷய பாத்ரா நிறுவனத்தின் தலைவர் மது பண்டிட் தாசா.
ஒரு மணி நேரத்தில் 1200 கிராம் கோதுமை மாவில் 40 ஆயிரம் ரொட்டிகளை தயாரிக் கும் இயந்திரத்தையும் வடிவமைத்திருக் கிறார்கள்.
Related Tags :
Next Story