கொலை, வழிப்பறி வழக்கில் தொடர்பு: கூலிப்படை தலைவன் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கொலை, வழிப்பறி வழக்கில் தொடர்பு: கூலிப்படை தலைவன் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 19 Oct 2018 9:30 PM GMT (Updated: 19 Oct 2018 5:16 PM GMT)

கொலை, வழிப்பறி வழக்கில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம், 

சேலம் பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 27). கிச்சிப்பாளையம் சுந்தர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்(28). இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளன.

இதில் சதீஷ்குமார் கடந்த 2013-ம் ஆண்டு பணத்திற்காக கூலிப்படை தலைவனாக செயல்பட்டு என்ஜினீயர் வினோத் என்பவரை கொலை செய்தார். இதுதொடர்பாக அவரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்காக கோபியிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்த திருமணிகண்டனிடம், மேலும் ரூ.50 லட்சம் கேட்டு சதீஷ்குமார், சதீஷ் ஆகிய இருவரும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதற்கிடையில் அவர்கள் இருவரும் கடந்த மாதம் தாதம்பட்டி பிரிவு ரோட்டில் சென்று கொண்டிருந்த மாரியப்பன் என்பவரை வழிமறித்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார்.

இதை பரிசீலித்து சதீஷ்குமார், சதீஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். 

Next Story