நெல்லை அருகே கோர விபத்து: கார், ஆட்டோ, சைக்கிள் மீது மோதிய மினி லாரி; 3 பேர் பலி - தந்தை-மகன் உள்பட 4 பேர் படுகாயம்
நெல்லை அருகே கார், ஆட்டோ, சைக்கிள் மீது மினி லாரி மோதிய கோர விபத்தில் 3 பேர் பலியானார்கள். தந்தை, மகன் உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கயத்தாறு,
மதுரை பை-பாஸ் ரோடு எஸ்.எஸ்.காலனி நாவலர் நகரை சேர்ந்தவர் பாபு முத்துராமலிங்கம் (வயது 50), வங்கி மேலாளர். இவருடைய மனைவி அன்னாள் ஜெயசீலி (45). இவர்களுடைய மகன் சர்ச்சில் அலெக்ஸ் பாண்டியன் (16). இவர்களுடைய உறவினர் வீடு நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் உள் ளது. அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாபு முத்துராமலிங்கம் குடும்பத் தினர் தயாரானார்கள்.
இதே நிகழ்ச்சியில் அன்னாள் ஜெயசீலியின் பெற்றோர் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை துறை ஊழியர் ராசையா (75), ஓய்வு பெற்ற ஆசிரியை பவுலின் தேவசகாயம் (66) ஆகியோரும் கலந்து கொள்ள முடிவு செய்தனர்.
இதற்காக ராசையா, பவுலின் தேவசகாயம் இருவரும் மதுரையில் உள்ள மகள் வீட்டுக்கு வந்தனர். அங்கிருந்த நேற்று ஒரு காரில் அவர்கள் நெல்லை நோக்கி புறப்பட்டனர். காரில் பாபுமுத்துராமலிங்கம், அன்னாள் ஜெயசீலி, சர்ச்சில் அலெக்ஸ் பாண்டியன், ராசையா, பவுலின் தேவசகாயம் ஆகிய 5 பேரும் பயணம் செய்தனர். காரை பாபு முத்துராமலிங்கம் ஓட்டினார்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானை கடந்து நாற்கர சாலையில் மாவுமில் பகுதியில் நேற்று பிற்பகல் வந்தபோது இவர்களது காரும், அந்த வழியாக வந்த ஆலடிப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (33) என்பவரது ஆட்டோ, துறையூரை சேர்ந்த விவசாயி பாஸ்கரன் (55) ஓட்டி வந்த சைக்கிள் ஆகிய 3 வாகனங்களும் லேசாக உரசிக் கொண்டன.
இதையடுத்து கார், ஆட்டோ, சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் கங்கைகொண்டான் பகுதியை கடந்து நெல்லை நோக்கி வேகமாக ஒரு மினி லாரி வந்தது. அந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த கார், ஆட்டோ மற்றும் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் கார், ஆட்டோ, சைக்கிள் ஆகியவை அப்பளம் போல் நொறுங்கி சில அடி தூரங்களுக்கு உருட்டி தள்ளப்பட்டன.
இந்த கோர விபத்தில் காருக்கு வெளியே நின்று கொண்டிருந்த ராசையா மினி லாரிக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். காருக்குள் இருந்த பவுலின் தேவசகாயம், அன்னாள் ஜெயசீலி மற்றும் பாபு முத்து ராமலிங்கம், சர்ச்சில் அலெக்ஸ் பாண்டியன், ஆட்டோ டிரைவர் ராஜ் குமார், சைக்கிளை ஓட்டி வந்த பாஸ்கரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இதைக்கண்ட அக்கம்பக் கத்தினர் மற்றும் கங்கை கொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காருக்குள் சிக்கி இருந்த 2 பெண்கள் உள்பட காயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச் சைக்காக பாளையங் கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பவுலின் தேவசகாயம், அன்னாள் ஜெயசீலி ஆகியோர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை யடுத்து கங்கைகொண்டான் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை ரோட்டில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத் தனர். இது தொடர்பாக கங்கைகொண்டான் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விபத்து நடந்த உடன் தப்பி ஓடிய மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story