தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்றதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு


தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்றதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Oct 2018 3:15 AM IST (Updated: 20 Oct 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்றதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை, 

திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் முகமது அலி மகன் சேக்தாவூத் (வயது 43). சமையல் தொழிலாளி. இவர் கடந்த 18.7.17-ந் தேதி சமையல் வேலையை முடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அவரை உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பழனி மற்றும் அடையாளம் தெரியாத இருவர் சேர்ந்து வழிமறித்தனராம். அவருடைய பையில் இருந்த பணத்தை பறிக்க முயன்றதுடன், ஒருவர் மட்டையால் அவரை தாக்கினாராம். பின்னர் அவருடைய மோட்டார் சைக்கிளை அவர்கள் பறித்து சென்று விட்டதாகவும், அந்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதை தொடர்ந்து ஐகோர்ட்டு கிளை உத்தரவுப்படி பழனி உள்பட 3 பேர் மீது திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவர் தற்போது ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story