முதல்கட்ட கடற்கரை சாலையில் 18 மாற்றுப்பாதைகள்; 9 நுழைவு வழிகளும் அமைகின்றன
முதல் கட்டமாக அமைக்கப்படும் மும்பை கடற்கரை சாலையில் 18 மாற்றுப்பாதைகள், 9 நுழையும் மற்றும் வெளியேறும் பாதைகளும் அமைப்படுகின்றன.
மும்பை,
மும்பையில் மெரின்லைன்ஸ் பிரின்சஸ் தெரு பகுதியில் இருந்து காந்திவிலிக்கு கடற்கரையையொட்டி சாலை போட திட்டமிடப்பட்டு உள்ளது. 29.20 கி.மீ. தூரத்துக்கு அமைய உள்ள இந்த கடற்கரை சாலை ரூ.12 ஆயிரம் கோடி செலவில் போடப்பட உள்ளது. கடற்கரை சாலை திட்டம் மும்பை மாநகராட்சி நிதியில் இருந்து நிறைவேற்றப்படுகிறது.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேற்கு புறநகர் பகுதியை சேர்ந்த மக்கள் எளிதில் தென்மும்பை பகுதிக்குள் வர முடியும். மேலும் நகர் புறப்பகுதியிலும், மேற்கு விரைவு சாலையிலும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
கடற்கரை சாலை திட்டத்தின் முதல் கட்டமாக பிரின்சஸ் தெருவில் இருந்து பாந்திரா- ஒர்லி கடல்வழி மேம்பாலம் வரை 9.98 கி.மீ. தூரத்துக்கு சாலை போடப்படுகிறது. இதில், கிழக்கு கடற்கரை சாலையில் முதல் கட்ட பணியில் 3 மாற்றங்களை மாநகராட்சி செய்து உள்ளது.
இதன்படி பிரின்சஸ் தெரு முதல் பாந்திரா- ஒர்லி கடல்வழி மேம்பாலம் இடையே 18 மாற்றுப்பாதைகள், 9 நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் அமைக்கப்படுகின்றன.

Related Tags :
Next Story