தாயின் கருப்பையை தானமாக பெற்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் தாயின் கருப்பையை தானமாக பெற்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
புனே,
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 28). திருமணம் ஆன இவருக்கு அடுத்தடுத்து 3 முறை கருச்சிதைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இனிமேல் மீனாட்சிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறினர்.
இதனால் மீனாட்சி குழந்தை பேறுக்காக புனேயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்குள்ள டாக்டர்கள், கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டால் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். இதற்காக மீனாட்சிக்கு அவரது தாயே கருப்பையை தானமாக வழங்க முன்வந்தார்.
இதையடுத்து கடந்த வருடம் மே மாதம் மீனாட்சிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. மீனாட்சி உடல்நிலை தேறிய பிறகு கடந்த மார்ச் மாதம் அவருக்கு செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை செய்யப்பட்டது. கரு முழுமையான வளர்ச்சி அடையும்வரை அவர் அந்த ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார்.
மீனாட்சிக்கு 18-ந் தேதி நள்ளிரவு 12.12 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 1 கிலோ 450 கிராம் எடை இருந்தது. தற்போது தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளதாகவும், கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண் ஒருவர் குழந்தை பெற்றது நாட்டிலேயே இது தான் முதல்முறை என்றும் அந்த மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story