ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்!


ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்!
x
தினத்தந்தி 20 Oct 2018 12:31 PM IST (Updated: 20 Oct 2018 12:31 PM IST)
t-max-icont-min-icon

தொழில்நுட்பம் வளர வளர, வாகனங்களின் வசதியும் வேகமும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

மின்காந்த உந்துவிசையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தனது வாகனத்தின் வடிவமைப்பை ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்ட்டேஷன் டெக்னாலஜீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதிகரிக்கும் நெரிசல், மாசு, செலவு போன்றவற்றின் காரணமாக போக்குவரத்து என்பது எரிச்சலூட்டுவதாகவும், நேரத்தைக் கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில், பஸ், கார், ரெயில், விமானம் போன்றவற்றைத் தொடர்ந்து, மின்காந்த உந்துவிசையை அடிப்படையாகக் கொண்ட அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வாகனத்தை உருவாக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹைப்பர்லூப் டி டி நிறுவனம் தனது முதலாவது ஹைப்பர்லூப் வாகனத்தின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.

32 மீட்டர்கள் நீளமும், 5 டன்கள் எடையும் கொண்ட இந்த வாகனத்தில் ஒரே சமயத்தில் 28 முதல் 40 பேர் பயணிக்க முடியும். மிகவும் முக்கியமாக இந்த வாகனம் மணிக்கு ஆயிரத்து 223 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும்.

தற்போது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனம், பிரான்சில் உள்ள இந்நிறுவனத்தின் சோதனைக்கூடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதிக்கப்படும் என்றும், வரும் ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவனத்தின் தலைவரும், இணை நிறுவனருமான பிபோப் கிரேஸ்ட்டா தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி, இந்தியா, இந்தோனேசியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளிலும் இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மேற்கண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருங்காலத்தில் எல்லாமே அதிவேகமாகத்தான் இருக்கும் போல!

Next Story