நேபாளத்தில் இரு மடங்கு ஆன புலிகள் எண்ணிக்கை!
அழிந்துவரும் விலங்கினங்கள் பட்டியலில் உள்ள புலிகளின் எண்ணிக்கை, நேபாள நாட்டில் இரு மடங்காகி இருக்கிறது.
உலகெங்கிலும் அழிவின் விளிம்பு நிலையில் உள்ள புலிகளைப் பாதுகாக்கவும் அவற்றின் இனப்பெருக்கத்துக்காகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புலியை தேசிய விலங்காக அறிவித்துள்ள இந்தியாவிலும் புலிகளைப் பாதுகாக்க சரணாலயங்கள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. புலிகளைக் காப்பதற்கு என்று சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் நம் நாட்டில் புலிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென்று அதிகரித்து விடவில்லை.
இந்தியாவைப் போல, வேறு பல நாடுகளிலும் புலிகளைப் பாதுகாக்க உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு, வனப்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நேபாள நாட்டில் புலிகள் பாதுகாப்புக்கான உயர்மட்டக் குழுவில் அந்நாட்டின் பிரதமர் இடம்பெற்றுள்ளார். புலிகளைக் காக்கும் முயற்சிகளை பிரதமரே நேரடியாக ஆய்வு செய்கிறார்.
இதன் விளைவாக, நேபாள நாட்டு வனப்பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு 121 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 235 ஆக அதிகரித்துள்ளதாம்.
இத்தகவலை அந்நாட்டின் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு காப்பகங்களின் உயரதிகாரி கோபால் பிரகாஷ் பட்டாராய் தெரிவித்துள்ளார்.
புலிகள் எண்ணிக்கையைப் பெருக்க நேபாளத்தில் என்ன செய்தார்கள் என்பதை எல்லா நாடுகளும் தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும்!
Related Tags :
Next Story