நவிமும்பை அருகே போலீசாருடன் துப்பாக்கி சண்டை; பிரபல ரவுடி, கூட்டாளி குண்டுபாய்ந்து படுகாயம்
நவிமும்பை அருகே பிரபல ரவுடியை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ரவுடி மற்றும் அவனது கூட்டாளி குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தனர்.
மும்பை,
நவிமும்பையை சேர்ந்த பிரபல ரவுடி பயாஸ் சேக் (வயது38). இவர் மீது கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், போலீசாரை தாக்கியது, நகைப்பறிப்பு உள்ளிட்ட 90 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக கடந்த பல மாதமாக போலீசார் அவரை தேடி வந்தனர்.
ஆனால் பயாஸ் சேக் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார். அண்மையில் விரார் பகுதிக்கு வந்த அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், போலீசாரின் ஜீப்பை தனது காரை கொண்டு மோதி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில், 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
தப்பி ஓடிய பயாஸ் சேக்கை குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், அவர் நவிமும்பையை அடுத்த காலாப்பூர் தாலுகா நாதல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். நேற்று அதிகாலை போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
அப்போது, திடீரென பயாஸ் சேக் தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் போலீசாரும் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் பயாஸ் சேக் உடல் மீது குண்டுபாய்ந்தது. உடன் இருந்த அவரது கூட்டாளியான சலீம் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இருப்பினும் அவர்கள் காயத்துடன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். போலீசார் 2 பேரையும் சுமார் 1½ கி.மீ. தூரத்துக்கு விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். சம்பவத்தின் போது மற்றொரு கூட்டாளியான சகாராம் பவாரும் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்த ரவுடி பயாஸ் சேக் மற்றும் அவனது கூட்டாளி சலீம் ஆகிய இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ரவுடி பயாஸ் சேக் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசார் மீது குண்டு பாய்ந்தது. ஆனால் அவர்கள் குண்டு துளைக்காத சட்டை அணிந்து இருந்ததால் காயமின்றி உயிர் தப்பினர். ரவுடியை துரத்தி பிடித்தபோது 2 போலீசார் காயம் அடைந்தனர். அவர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சினிமா பாணியில் ரவுடியை போலீசார் துப்பாக்கி சண்டை நடத்தி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story