கன்டெய்னர் லாரியால் விபத்து: மெட்ரோ வழித்தட இரும்பு சட்டம் கார் மீது விழுந்தது


கன்டெய்னர் லாரியால் விபத்து: மெட்ரோ வழித்தட இரும்பு சட்டம் கார் மீது விழுந்தது
x
தினத்தந்தி 21 Oct 2018 4:15 AM IST (Updated: 21 Oct 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

கன்டெய்னர் லாரி இடித்ததில் மெட்ரோ ரெயில் வழித்தட கான்கிரீட் தூணில் இருந்த ராட்சத இரும்பு சட்டம் கார் மீது விழுந்தது. இதில் டிரைவர் உயிர் தப்பினார்.

மும்பை,

மும்பை காட்கோபர் - மான்கூர்டு லிங் சாலையில் உள்ள லோட்டஸ் ஜங்ஷன் பகுதியில் மெட்ரோ ரெயில் வழித்தட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அங்கு கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு ராட்சத இரும்பு சட்டங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், நேற்று அங்குள்ள சாலையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென கான்கிரீட் தூணில் இடித்து கொண்டு சென்றது.

இதனால் அதிலிருந்த இருந்த இரும்பு சட்டம் விலகி கீழே விழுந்தது.

அப்போது, அந்த வழியாக வந்து கொண்டிருந்த கார் மீது அந்த இரும்பு சட்டம் விழுந்தது. இதில் அந்த காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கார் மீது விழுந்து கிடந்த இரும்பு சட்டத்தை அகற்றும் பணி நடந்தது.

இந்த சம்பவத்தின் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story