‘மீ டூ' இயக்கம் தவறாக பயன்படுத்தப்பட கூடாது - மும்பை ஐகோர்ட்டு கருத்து


‘மீ டூ இயக்கம் தவறாக பயன்படுத்தப்பட கூடாது - மும்பை ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 21 Oct 2018 4:30 AM IST (Updated: 21 Oct 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

‘மீ டூ' இயக்கம் தவறாக பயன்படுத்தப்பட கூடாது என மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கூறியுள்ளார்.

மும்பை,

இந்தி பட இயக்குனர் விகாஸ் பால் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். குற்றச்சாட்டை கூறிய பெண்ணிற்கு ஆதரவாக இயக்குனர்கள் அனுராக் கஷ்யப், விக்ரமாதித்யா மோத்வானே ஆகியோர் கருத்து கூறியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இயக்குனர் விகாஸ் பால் ரூ.10 கோடி கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி ஷாருக் காத்தவாலா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது:-

புகார் தெரிவித்த பெண் இடத்தில் இருந்து கொண்டு 3-வது நபர் குற்றம் சாட்டப்பட்டவரின் மீது அவதூறு பரப்ப கூடாது. ‘மீ டூ' இயக்கம் அதற்கானது அல்ல. அந்த இயக்கம் மற்றவர்கள் நினைப்பது எல்லாம் எழுதுவதற்காக அல்ல.

‘மீ டூ' இயக்கம் தொடர்பாக சரியான வழகாட்டுதல்கள் வேண்டும். அல்லது இது தவறாகவும், அவதூறு பரப்பவும் பயன்படுத்தப்படும். இது எங்கே போய் முடியும் என்பது தெரியவில்லை. ‘மீ டூ' இயக்கம் தவறாக பயன்படுத்தப்பட கூடாது. இதற்கு அதிகாரிகள் சரியான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story