காவிரி ஆர்.எஸ். பகுதியில் பாலம் அமைக்கும் பணி 6 மாதத்திற்குள் முடிக்கப்படும் : அமைச்சர் தங்கமணி தகவல்
காவிரி ஆர்.எஸ். பகுதி யில் பாலம் அமைக்கும் பணி 6 மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் கொக்கராயன் பேட்டை முதல் திருச்செங் கோடு சாலையில் 4 கி.மீட்டர் நீளத்திற்கு தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னை யன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்துகொண்டு பூமிபூஜையிட்டு, தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். பகுதியில் ரூ.22.15 கோடி மதிப்பீட்டில் புதியதாக கீழ்பாலம் கட்டப் பட்டு வரும் பணியினை அமைச்சர் பார்வையிட்டார். பாலம் அமைப்பதற்காக மண் அகற்றப்பட்டு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு உள்ள தையும், மேலும் ரெயில் பாதை யின் கீழே விரைந்து கீழ்பாலம் அமைக்கும் வகையில் பிரமாண்டமான முறையில் சிமெண்டு கான்கிரீட் பிளாக்கு கள் தயார் செய்யப்பட்டு உள்ளதையும் நேரில் பார்வையிட்டார்.
அதை தொடர்ந்து அமைச் சர் தங்கமணி கூறியதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டியதன் காரணமாக தண்ணீர் தேங்கியதால் கொக்கராயன்பேட்டை, பாப்பம்பாளையம் பகுதிகளில் இருந்து காகித ஆலைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் சுற்றி வரு கின்ற நிலைமை ஏற்பட்டது.
இதுகுறித்து மறைந்த முன் னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கவனத்திற்கு எடுத்துச்சென்று காவிரி ஆர்.எஸ். பகுதியில் ஒரு கீழ்பாலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் அடிப் படையில் ஜெயலலிதா அதற் காக நிதிஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில் கீழ் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 மாத காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்படும்.
இந்த பாலப்பணிகள் முடி வடைந்த பின்னர் எஸ்.பி.பி. காலனி வழியாக செல்லும் பஸ்களும், கரும்பு ஏற்்றிவரும் லாரிகளும் எளிதாக வர இயலும். காவிரியில் இருந்து பள்ளிபாளையம் செல்ல வேண்டும் என்றால் பஸ் போக்குவரத்து செல்லமுடியா மல் இப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலை, பாலம் பணிகள் முடிவடைந்த பின்னர் முற்றிலும் நீங்கிவிடும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளில் பள்ளிபாளை யம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம், பள்ளிபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வெள்ளி யங்கிரி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சசி குமார், தாசில்தார் ரகுநாதன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story