முன்பதிவில்லா டிக்கெட் மூலம் ரெயில்களில் ஒரே நாளி ல் 22 ஆயிரம் பேர் பயணம் : கூடுதலாக ரூ.2 லட்சம் வசூல்


முன்பதிவில்லா டிக்கெட் மூலம் ரெயில்களில் ஒரே நாளி ல் 22 ஆயிரம் பேர் பயணம் : கூடுதலாக ரூ.2 லட்சம் வசூல்
x
தினத்தந்தி 21 Oct 2018 3:00 AM IST (Updated: 21 Oct 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி கோவையில் இருந்து ஒரே நாளில் முன்பதிவில்லாத டிக்கெட் மூலம் 22 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இதனால் கூடுதலாக ரூ.2 லட்சம் வசூலானது.

கோவை,

ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை என்று தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்தது. இதனால் கோவையில் வசித்து வரும் வெளியூர்காரர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்கள் பஸ் மற்றும் ரெயில் மூலம் சென்றுள் ளனர்.

இதன்காரணமாக கோவை ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. கோவை ரெயில் நிலையம் வழியாக தினமும் 80 ரெயில்கள் வந்து செல்கின்றன. இதில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்தும், முன்பதிவு செய்தும் பயணிகள் சென்று வருகிறார்கள். ஆனால் கடந்த 5 நாட்களில் குறிப்பாக கடந்த 17-ந் தேதி அதிக அளவில் பயணிகள் கோவையில் இருந்து ரெயில் மூலம் சென்றுள்ளனர்.

இது குறித்து கோவை ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை ரெயில் நிலையத்தில் முன்பதிவு செய்தும், முன்பதிவு செய்யாமலும் பயணிகள் ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இதில் முன்பதிவில்லாமல் மட்டும் தினந்தோறும் சராசரியாக 11 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை அதிக அளவில் டிக்கெட்டுகள் விற்றுள்ளன. பயணிகளும் அதிக அளவில் பயணம் செய்துள்ளனர்.

தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவில்லாத டிக்கெட் தவிர முன்பதிவு செய்தும் ஏராளமான பயணிகள் ரெயிலில் சென்றுள்ளனர். அவர்களின் விவரம் உடனடியாக தெரியவில்லை. ஒவ்வொரு ரெயிலும் சராசரியாக 6 பெட்டிகள் முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகள். 11 முதல் 13 பெட்டிகள் முன்பதிவு ரெயில் பெட்டிகள் ஆகும்.

கோவை ரெயில் நிலையத்தில் சராசரியாக தினமும் முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட் மூலம் ரூ.15 லட்சம் வசூலாகும். ஆனால் கடந்த 5 நாட்களில் அதிகபட்சமாக 17-ந் தேதி 16 ஆயிரத்து 348 டிக்கெட்டுகள் விற்றுள்ளன. அன்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 119 பேர் பயணம் செய்துள்ளனர். ஒரே நாளில் டிக்கெட் கட்டணம் மூலம் ரூ.17 லட்சத்து 64 ஆயிரத்து 307 வசூலாகியுள்ளது. இது வழக்கமாக வசூலாகும் கட்டணத்தை விட ரூ.2 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை ரெயில் நிலையத்தில் கடந்த 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை விற்பனையான முன்பதி வில்லாத டிக்கெட்டுகள், பயணிகள், வசூலான தொகை பற்றிய விவரம் வருமாறு:- 

Next Story