உளுந்தூர்பேட்டை அருகே: மயில்கள் வேட்டையாடிய 2 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே மயில்கள் வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசூர்,
எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் நேற்று உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குஞ்சரம் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சாக்கு மூட்டை மற்றும் நாட்டுத் துப்பாக்கியுடன் நடந்து வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து, அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தனர். அதில் 3 மயில்கள், 10 கொக்குகள் செத்த நிலையில் இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தியதில் அவர்கள், எறையூரை சேர்ந்த குழந்தைசாமி மகன் இஸ்ரேயல் (வயது 24), பிரான்சிஸ் மகன் யாக்கோபு(24) என்பதும், நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி குஞ்சரம் காப்புக்காட்டில் மயில்கள் மற்றும் கொக்குகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இஸ்ரேயல், யாக்கோபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் 3 மயில்கள், 10 கொக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story