திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி அடுத்த மாதம் 14-ந் தேதி நடக்கிறது
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான வினாடி-வினா போட்டி அடுத்த மாதம்(நவம்பர்) 14-ந் தேதி நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவிலான வினாடி-வினா போட்டிகள் அடுத்த மாதம்(நவம்பர்) 14-ந் தேதி நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் பயின்றோர் கழகம் ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டியை நடத்தி வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொது அறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்காக இந்த போட்டி நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9-வது, 10-வது மற்றும் 11-வது, 12-வது படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஒவ்வொரு பள்ளியும் 2 மாணவர் அல்லது 2 மாணவிகளை போட்டிக்கு அனுப்பலாம். போட்டியில் கலந்துகொள்ள பதிவு கட்டணம் இலவசம்.
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தலைமை ஆசிரியரிடம் அத்தாட்சி சான்றிதழ் பெற்று வர வேண்டும். தகுதி சுற்றில் உள்ள அணிகளை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம்(நவம்பர்) 14-ந் தேதி அன்று காலை எழுத்து தேர்வும், அதன்பின்பு 6 அணிகளை தேர்ந்தெடுக்க தகுதி சுற்றும், மாலையில் இறுதி சுற்றும் நடைபெறும்.
மாநில அளவிலான இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் பள்ளிக்கு சிவந்தி சுழற்கோப்பையும், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். 2-வது, 3-வது இடங்களை பெறும் அணிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
வினாடி-வினா கேள்விகள், அடிப்படை அறிவியல், நாட்டு நடப்பு, அடிப்படை கணிதம் மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து கேட்கப்படும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணியினருக்கு போக்குவரத்து செலவு அளிக்கப்படும்.
வெற்றி பெறும் அணிகளுக்கு சுழற்கோப்பையையும், ரொக்கப்பரிசுகளையும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கல்லூரிநாள் விழாவின்போது வழங்குவார்.
இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் தங்களது பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி(தொலைபேசி எண்ணுடன்) ஆகிய விவரங்களை எழுதி தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் முதல்வர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, திருச்செந்தூர்-628 215, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். alu-m-ni@drs-a-c-oe.org மற்றும் drs-a-c-oe@aei.edu.in என்ற மின்னஞ்சல் வழியாகவும் பதிவு செய்யலாம். பதிவு செய்ய கடைசி நாள் 7.11.2018 ஆகும்.
இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய www.drs-a-c-oe.org என்ற இணையதளம் வழியாகவும், 04639-242482 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல்களை கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.ஒய்சிலின் ஜிஜி தெரிவித்தார்.
Related Tags :
Next Story