மும்பையில் சர்வதேச வாக்குப்பதிவு மாநாடு 2 நாட்கள் நடக்கிறது
தேர்தல் கமிஷன் சார்பில் மும்பையில் சர்வதேச வாக்குப்பதிவு மாநாடு ஆகஸ்டு 25 மற்றும் 26-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 73 மற்றும் 74-வது பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதை கொண்டாடும் விதமாக வரும் 25 மற்றும் 26- ந் தேதிகளில் சர்வதேச வாக்குப்பதிவு மாநாடு நடைபெற உள்ளது.
மும்பையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு மராட்டிய மாநில தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் கமிஷனர் ஜே.எஸ். சகாரியா கூறியதாவது:-
“ஆரோக்கியமான ஜனநாயகத்திற்காக சிறப்பான தேர்தல்” என்ற தலைப்பில் இந்த சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஜனநாயக நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
தற்போதைய தேர்தல் நடைமுறைகளில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும்.
மேலும் ஜனநாயகத்தின் பொது உரிமை, பண பலத்தை தடுப்பது, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை எப்படி கட்டுப்படுத்துவது போன்றவை உள்ளிட்ட 5 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
Related Tags :
Next Story