மும்பை, தம்பதி மீது சரமாரி தாக்குதல் தந்தை, மகன் கைது
வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதை தட்டிக்கேட்ட தம்பதி மீது சரமாரி தாக்குதல் நடத்திய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை சாக்கிநாக்கா பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டு முன் வாலிபர் ஒருவர் மோட்டர் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இதை கவனித்த அந்த நபரும், அவரது மனைவியும் வாலிபரிடம் சென்று மோட்டார் சைக்கிளை இங்கே நிறுத்தாதீர்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் வாலிபர் மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தாமல் அவர்களிடம் தகராறு செய்தார்.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அந்த வாலிபர் தனது தந்தையை அங்கு வரவழைத்தார். பின்னர் ஏற்பட்ட சண்டையில் தந்தை, மகன் இருவரும் சேர்ந்து அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தடுக்க முயன்றார். ஆனால் தந்தை, மகன் இவரும் சேர்ந்து அந்த பெண்ணையும் சரமாரியாக தாக்கினர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கணவர் மற்றும் மனைவியை மீட்டனர்.
பின்னர் அவர்கள் இதுபற்றி சாக்கிநாக்கா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை தாக்கிய தந்தை மகன் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் கைதான வாலிபர் பெயர் லோகேஷ் என்பதும், அவரது தந்தை பெயர் நரேந்திர திவாரி என்பதும் தெரியவந்தது.

Related Tags :
Next Story