மாநிலத்தில் 180 தாலுகாக்களில் வறட்சி ஏற்படும் அபாயம் முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சு


மாநிலத்தில் 180 தாலுகாக்களில் வறட்சி ஏற்படும் அபாயம் முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சு
x
தினத்தந்தி 24 Oct 2018 5:00 AM IST (Updated: 24 Oct 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

மாநிலத்தில் 180 தாலுகாக்களில் வறட்சி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவான மழைப்பொழிவே பெய்து உள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளதாவது:-

மாநிலத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட குறைவாக அதாவது 77 சதவீதம் மட்டுமே மழை பெய்து உள்ளது. இதனால் 180 தாலுகாக்களில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அதை எதிர்கொள்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை, விவசாய பம்பு செட்டுகளுக்கு மின்வெட்டு இன்றி மின்வினியோகம், டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசு குழுவினர் விரைவில் மாநிலத்திற்கு வந்து பார்வையிட்டு தேவையான நிதியை தருவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நேரடியாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என கூறாமல் வறட்சி ஏற்படும் நிலை உள்ளதாக முதல்-மந்திரி கூறியிருப்பதை காங்கிரஸ் கட்சி விமர்சித்து உள்ளது.'

Next Story