ஈரோடு கோர்ட்டில் 3 மாவோயிஸ்டுகள் ஆஜர்
ஈரோடு கோர்ட்டில் நேற்று 3 மாவோயிஸ்டுகள் ஆஜர் ஆனார்கள்.
ஈரோடு,
சென்னிமலை, கடத்தூர், கோபி, அம்மாபேட்டை ஆகிய போலீஸ் நிலைய எல்லைகளுக்குள் சிலர் போலி ஆவணங்கள் கொடுத்து செல்போன் சிம்கார்டுகள் வாங்கினார்கள். இதுகுறித்த புகார்களின் பேரில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதுதொடர்பாக மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த ரூபேஸ், வீரமணி, கண்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் வீரமணி, கண்ணன் ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ரூபேஸ் கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவர்கள் 3 பேர் மீது ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி உமாமகேஸ்வரி வழக்கை விசாரித்தார். அப்போது ரூபேஸ், வீரமணி, கண்ணன் ஆகிய 3 பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர் ஆனார்கள்.
வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர் கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை மத்திய சிறைக்கும், ரூபேஸ் கேரள மாநிலம் திருச்சூர் சிறைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story