தமிழகத்தில் நடைபெறும் ஆன்லைன் டெண்டர் முறை இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது - அமைச்சர் ஒ.எஸ்.மணியன் பேட்டி


தமிழகத்தில் நடைபெறும் ஆன்லைன் டெண்டர் முறை இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது - அமைச்சர் ஒ.எஸ்.மணியன் பேட்டி
x
தினத்தந்தி 25 Oct 2018 4:15 AM IST (Updated: 25 Oct 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நடைபெறும் ஆன்லைன் டெண்டர் முறை இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என அமைச்சர் ஒ.எஸ்.மணியன் கூறினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் வந்த கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் நடைபெறும் ஆன்லைன் டெண்டர் முறை இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த டெண்டரை பொறுத்தவரை எந்த அமைச்சருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இது முழுக்க, முழுக்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு மட்டும் தான் மருத்துவ துறையில் சிறந்து விளங்கி வருகிறது. பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிசிச்சை பெற வேண்டும். பருவ காலத்திற்கு ஏற்ப வரும் நோய்களுக்கு தேவையான மருந்துகளை தமிழக அரசு போதுமான அளவிற்கு இருப்பு வைத்துள்ளது. தற்போது பரவி வரும் காய்ச்சல் உள்பட எந்த நோய்களுக்கும் அரசு மருத்துவமனையில் மருந்துகள் இல்லை என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story