ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி,
பிரான்ஸ் அரசிடமிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக ஆளும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஊழல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story