தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தரக்கட்டுப்பாட்டு மேலாளராக பணிபுரிபவர் ஆசைமணி. இவர் புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தங்கியுள்ள விடுதி அறையில் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் ஆசைமணியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆசைமணி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த தகவல் அறிந்த சக அலுவலக பணியாளர்கள் மேலாளர் ஆசைமணி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் 3 பேரை கைது செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நுகர்பொருள் வாணிப கழககத்தின் கீழ் இயங்கும் அனைத்து கூட்டுறவு அங்காடிகள் மற்றும் செயல்முறை சேமிப்பு கிடங்கு ஊழியர்கள் தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மேலாளர் ஆசைமணியை தாக்கியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஊழியர்களின் இந்த திடீர் நடவடிக்கையால் அனைத்து கூட்டுறவு அங்காடிகள் மற்றும் செயல்முறை சேமிப்பு கிடங்குகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Tags :
Next Story