திருச்சி மாநகராட்சியால் ‘டெங்கு’ கொசு புழுக்கள் இல்லாத 50 வீடுகள் கண்டறிந்து கவுரவிப்பு
திருச்சி மாநகராட்சியால் ‘டெங்கு’ கொசு புழுக்கள் இல்லாத 50 வீடுகள் கண்டறிந்து கவுரவிக்கப்பட்டது.
திருச்சி,
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 4 கோட்டங்களில் 65 வார்டுகளிலும் உள்ள சுமார் 2,46,487 கட்டிடங்களிலும் ‘டெங்கு’ கொசு புழுக்கள் உற்பத்தியாகும் ஆதாரங்களை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி மூலம் 600 பணியாளர்கள் 175 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொன்மலை கோட்டம் 43-வது வார்டு டி.வி.எஸ் நகர், ராம் தெரு பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் உதவிஆணையர், உதவி செயற்பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் வீடு, வீடாக நேற்று சென்று ஆய்வு நடத்தினர். அப்போது டெங்கு கொசு புழுக்கள் இல்லாத வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கண்டறியப்பட்டு மாநகராட்சி மூலம் அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக 50 வீடுகளுக்கு ‘ஸ்மைலிங் ஸ்டிக்கர்’ ஆணையர் முன்னிலையில் ஒட்டப்பட்டது.

Related Tags :
Next Story