பாரூர் அருகே: கிணற்றில் தவறி விழுந்து பள்ளி ஆசிரியை பலி


பாரூர் அருகே: கிணற்றில் தவறி விழுந்து பள்ளி ஆசிரியை பலி
x
தினத்தந்தி 25 Oct 2018 3:00 AM IST (Updated: 25 Oct 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

பாரூர் அருகே, கிணற்றில் தவறி விழுந்து பள்ளி ஆசிரியை பலியானார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பாரூர் ஏ.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சல்மா (வயது 29). தனியார் பள்ளி ஆசிரியை.
சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தார்.

கிணற்றில் தண்ணீர் இருந்ததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story