அஞ்செட்டி அருகே: மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவி பலி


அஞ்செட்டி அருகே: மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவி பலி
x
தினத்தந்தி 25 Oct 2018 3:00 AM IST (Updated: 25 Oct 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவி பலியானார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகே உள்ளது சித்தாண்டபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகள் சரண்யா (வயது 16). அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக சரண்யா கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

இதனால் அவரை அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இதன்பின்னர் சரண்யாவை அவரது பெற்றோர் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார். மர்ம காய்ச்சலால் சரண்யா இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதேபோல் சித்தாண்டபுரத்தில் சில மாதங்களுக்கு முன்பு சின்னப்பா என்பவரது மகள் வளர்மதி (4) என்ற சிறுமி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தாள்.

மர்ம காய்ச்சலால் மாணவி இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story