காங்கிரஸ் தொண்டர் கொலை வழக்கு பா.ஜனதாவை சேர்ந்த 2 பேர் கைது


காங்கிரஸ் தொண்டர் கொலை வழக்கு பா.ஜனதாவை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2018 3:08 AM IST (Updated: 25 Oct 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தொண்டர் கொலை வழக்கில் பா.ஜனதாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது45). காங்கிரஸ் தொண்டர். பேஸ்புக் பதிவு தொடர்பாக இவருக்கும் அசல்பா பகுதியை சேர்ந்த பா.ஜனதா கட்சியினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில், சம்பவத்தன்று மனோஜூக்கும் பா.ஜனதா தொண்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மனோஜ், உமேஸ் (30) என்பவரை கன்னத்தில் அறைந்து பா.ஜனதா விளம்பர பேனர்களை கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பா.ஜனதா தொண்டர்களில் சிலர் அசல்பா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வைத்து மனோஜை வாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

2 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இதில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய பா.ஜனதா தொண்டர்களான உமேஸ் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஜித்தேந்திர மிஸ்ராவை (27) ஜல்காவ் மாவட்டம் புசாவலில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு அவர்களை 29-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உள்ளது.

Next Story