மும்பையில் கூடுதலாக 5 ஆயிரம் கண்காணிப்பு கேமரா மாநில அரசு திட்டம்
மும்பையில் கூடுதலாக 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முக்கிய சாலைகள், சந்திப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. தற்போது மும்பை முழுவதும் 1,500 இடங்களில் 4 ஆயிரத்து 746 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது இதில் 96 சதவீத கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன.
கண்காணிப்பு கேமராக்கள் குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண போலீசாருக்கு முக்கிய துருப்பு சீட்டாக உள்ளது. இதேபோல போக்குவரத்து விதிகளை மீறுபவர்களையும் கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் உதவி செய்கின்றன.
கூடுதலாக 5 ஆயிரம் கேமராக்கள்
இந்தநிலையில் மும்பையில் மேலும் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரை செலவு ஆகும். புதிய கண்காணிப்பு கேமராக்களை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகள், குறுகலான சாலைகளிலும் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது எங்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். மேலும் குற்றச்செயல்கள் குறையும்’’ என்றார்.
Related Tags :
Next Story