விழுப்புரத்தில் : சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


விழுப்புரத்தில் : சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2018 3:15 AM IST (Updated: 25 Oct 2018 11:17 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 8-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை 21 மாதங்களுக்கு வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும்போது பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

அந்த வகையில் விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மணிக்கண்ணன் வரவேற்றார். துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், வீமன், ஆறுமுகம், இணை செயலாளர்கள் ரஷிதா, சட்டநாதன், கிருபாகரன், பொருளாளர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தேசிங்கு கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில செயலாளர் பார்த்திபன் தொடக்க உரையாற்றினார்.

போராட்டத்தில் சங்கத்தின் மாநில பொருளாளர் பேயத்தேவன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.

இதில் நிர்வாகிகள் மூர்த்தி, அசோகன், அனந்தகிருஷ்ணன், முத்து, ரவி, சரவணன், செந்தில்குமார், நடராஜ், மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் நேற்று இரவிலும் நீடித்தது.

Next Story