சின்னசேலம் அருகே: பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது; டிரைவர் பலி


சின்னசேலம் அருகே: பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது; டிரைவர் பலி
x
தினத்தந்தி 26 Oct 2018 3:15 AM IST (Updated: 25 Oct 2018 11:30 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சின்னசேலம், 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன்(வயது 50), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக ஆட்டோவில் சின்னசேலத்துக்கு புறப்பட்டார். விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னசேலம் அடுத்த வி.கிருஷ்ணாபுரம் ஏரி அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தறிகெட்டு ஓடியவாறு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான மணிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மணிவண்ணன் மனைவி கலா கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story