வேலூரில் போலீசாருக்கான பளுதூக்கும் போட்டி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
வேலூரில் போலீசாருக்கு மண்டலங்களுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டி நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் போட்டியை தொடங்கி வைத்தார்.
வேலூர்,
தமிழ்நாடு போலீசாருக்கு, மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி நேற்று நடைபெற்றது. கராத்தே, ஜூடோ, குத்துச்சண்டை, பளுதூக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. பளு தூக்கும் போட்டி தவிர மற்ற அனைத்து போட்டிகளும் சென்னையில் நடைபெற்றது.
பளுதூக்கும் போட்டி வேலூரில் நடந்தது. வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பளு தூக்கும் பயிற்சி மையத்தில் நடந்த இந்த போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன், ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம் ஆகிய 4 மண்டலங்களை சேர்ந்த 40 ஆண் போலீசாரும், 15 பெண் போலீசாரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு 55 கிலோ எடை பிரிவில் இருந்து 109 கிலோ எடை பிரிவு வரை 10 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை (இன்று) பரிசுகள் வழங்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story