18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் தீர்ப்பு ஆட்சியை கவிழ்க்க நினைத்த துரோகிகளுக்கு சரியான பாடம்


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் தீர்ப்பு ஆட்சியை கவிழ்க்க நினைத்த துரோகிகளுக்கு சரியான பாடம்
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 26 Oct 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு ஆட்சியை கவிழ்க்க நினைத்த துரோகிகளுக்கு சரியான பாடம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதியரசர் வழங்கிய தீர்ப்பு அ.தி.மு.க. ஆட்சிக்கும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. ஜெயலலிதா தனது உயிரை கொடுத்து உருவாக்கிய இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்த துரோகிகளுக்கு இது சரியான பாடம்.

ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த ஆட்சி 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும். அ.தி.மு.க. இன்னும் பல வெற்றிகளை பெறும். இந்த தீர்ப்பில் எங்களுக்கு பின்னடைவு இல்லை. இது ஒரு அனுபவம் என டி.டி.வி.தினகரன் சொன்னதாக சொல்கிறீர்கள். இதுவா? அனுபவம். அப்படியென்றால் நிறைய அனுபவம் அவருக்கு காத்திருக்கிறது. 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

மீண்டும் தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதியிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். ஜெயலலிதா ஆட்சி செய்ததுபோல தமிழகத்தில் முதல்- அமைச்சரும், துணை முதல்- அமைச்சரும் ஆட்சிசெய்கின்றனர். அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இயக்கம். இந்த இயக்கம் ஜெயலலிதா கூறியது போல இன்னும் 100 ஆண்டுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். கரூரில் ஒரு நபர் 2 அமாவாசைக்கு தான் ஆட்சி நடக்கும் என்று கூறினார். மாதா மாதம் அமாவாசை வந்து கொண்டு தான் இருக்கும். இன்னும் பல அமாவாசைகளை அந்த நபர் பார்க்க தான்போகிறார். எங்கள் இல்லத் திருமண விழாவில் தனியார் பள்ளி பஸ்களும், அரசு பஸ்களும் இயக்கப்பட்டதாக கூறுகின்றனர். அரசு விதியின்படி ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி பஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story