திருமங்கலம், அண்ணாநகர் டவர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச மூட்டு சிகிச்சை இன்று தொடங்குகிறது


திருமங்கலம், அண்ணாநகர் டவர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச மூட்டு சிகிச்சை இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 26 Oct 2018 3:30 AM IST (Updated: 26 Oct 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மூட்டு சிகிச்சை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் இலவசமாக அளிக்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலக ஆர்த்ரிடிஸ் (மூட்டு சிகிச்சை) தினத்தையொட்டி சென்னை, திருமங்கலம் மற்றும் அண்ணாநகர் டவர் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில், மெட்ரோ ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மூட்டு சிகிச்சை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் இலவசமாக அளிக்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைந்து சுந்தரபாண்டியன் மூட்டு மற்றும் இணைப்பு மருத்துவமனை டாக்டர்கள் காலை 10 மணியில் இருந்து 12.30 மணி வரையிலும், மாலையில் 3 முதல் 6 மணி வரையிலும் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இதில் டாக்டர்கள் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனை, கணினி மூலம் எலும்புகளின் உறுதித்தன்மை, கவுன்சிலிங், சிகிச்சைக்கான சலுகை அட்டைகளும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story