சென்னை ரிப்பன் மாளிகையில் சத்துணவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் 40 பேர் கைது

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் பல கட்டங்களில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
சென்னை,
காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கவேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் பல கட்டங்களில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் நேற்று சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரம்மாள், பொதுச்செயலாளர் ஆர்.நூர்ஜஹான் தலைமையில் நடந்த போராட்டத்தில் 40 பேர் கலந்துகொண்டனர்.
பெரியமேடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரும் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story