திருத்தணி அருகே செம்மரக்கட்டைகள் பறிமுதல்


திருத்தணி அருகே செம்மரக்கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:15 AM IST (Updated: 26 Oct 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே செம் மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருத்தணி,

திருத்தணியை அடுத்த பொன்பாடிசாவடி அருகே ஒரு புதரில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக திருத்தணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர்.

அங்குள்ள ஒரு புதரில் மினி டெம்போவில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1 டன் எடைகொண்ட 37 செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அவற்றை மறைக்க அதன் மீது தக்காளி கொண்டு செல்லும் பிளாஸ்டிக் கூடைகள் வைத்து இருந்ததையும் கண்டு போலீசார் செம்மரக்கட்டைகளை மினி டெம்போவுடன் பறிமுதல் செய்தனர். அவற்றை திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

செம்மரக்கட்டைகள் திருத்தணி வனச்சரக அலுவலர் வாசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. செம்மரக்கட்டைகள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story